இலங்கை பெண்ணான லாஸ்லியா சொன்ன இரகசிய காரணம்!
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் லாஸ்லியா. இவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதோடு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பவராகவும் பணியாற்றியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பிரண்ட்ஷிப் என்னும் படத்தில் நடித்திருந்தார். இதில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்திருந்தார். இதுமட்மின்றி, ஆக்ஷன் கிங் அர்ஜுன் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதன்பின் தற்போது தனது பிக் பாஸ் சக போட்டியாளரான இலங்கையை சேர்ந்த தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தயாரித்து நடித்துள்ளார், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார். இப்படத்தின் டிரைலர் கூட சமீபத்தில் வெளிவந்து, நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் லாஸ்லியா அண்மையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
முன்பு இருந்த chubby லாஸ்லியாவை தான் ரசிகர்களுக்கு அதிகம் பிடித்த நிலையில் அவர் ஏன் ஒல்லி ஆனார் என கேட்டதற்கு, “எனக்கு Health Issues இருந்தது, அதனால் தான் எடையை குறைக்க வேண்டி இருந்தது.
முன்பு நான் ஒல்லியாக தான் இருந்தேன். பிக் பாஸ் வரும்போது எனக்கு weight போட்டிருந்தது. தற்போது மீண்டும் ஒல்லியாகி இருக்கிறேன்.” என கூறியுள்ளார்.