உடல் எடை அதிகரிப்பால் கவலையா? இந்த டயட்டை கடைபிடியுங்கள்
உடல் எடை அதிகரிப்பால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இவ் நவீன கால உலகில் பலர் துரித சாப்பிடுகின்றனர்.
அதிகமாக காய்கறி-பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள் எமது தினசரி உணவுகளில் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் எடுத்துக்கொள்வது உடலில் உள்ள வைட்டமின்களை அதிகரிக்கும்.
உடலில் உள்ள கழிவுகளை சுத்தமாக அகற்றவும் காய்கறி மற்றும் பழங்கள் உதவுகிறது.
இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை கட்டுப்படுத்தவும் காய்கறி மற்றும் பழ டயட்டை நாம் பின்தொடரலாம்.
தானிய வகை உணவுகள்
அதிக தானிய வகைகளை எடுத்துக்கொள்வதும் நம் உடல் நலத்தை காப்பதில் பெரும் பங்கு வகுக்கிறது.
உடல் எடையை குறைக்க கைக்குத்தல் அரிசி, ஓட்ஸ் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம்.
ஆனால் இவற்றையும் உடலுக்கு ஏற்றவாறு குறைவான அளவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
கோதுமையும் உடல் எடையை குறைக்க உதவும். இரவில் 1 அல்லது 2 கோதுமை சப்பாத்தி சாப்பிடுவது மிகப்பெரிய நன்மை பயக்கும்.
சர்க்கரை உப்பின் அளவை குறையுங்கள்
உடல் எடையை கண்டிப்பாக குறைக்க விரும்பினால் கண்டிப்பாக இதை செய்ய வேண்டும்.
கடையில் விற்கும் உணவுகள் மற்றும் பையில் அடைத்து விற்கப்படும் உணவுகளில் அதிகளவு கொழுப்பு சத்து நிறைந்துள்ளது.
அது மட்டுமின்றி சுவைக்காக பல ரசாயனங்கள் அதில் சேர்க்ப்படுவதுண்டு.
ஒரு மாதத்திற்கு கடையில் விற்கும் உணவுகளை சாப்பிடாமல் இருந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர முடியும்.
நிறைய தண்ணீர் அருந்துங்கள்
வெயில் காலத்தில் நம்மில் பாதி பேர் குளிர் சாதன வசதி நிரம்பிய அரையிலேயே பொழுதை கழிக்கிறோம்.
இதனால் தண்ணீர் தாகம் ஏற்படுவது குறைந்த போய்விடும்.
நம் உடலுக்கு ஏற்ற அளவு தண்ணீர் அருந்தவில்லை என்றால் நீரிழிவு ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆரோக்கிய டையட்டில் தண்ணீரும் முக்கிய பங்கு வகிக்கிறது. டையட்டை பின்தொடர்பவர்கள் தினமும் 8 டம்ளர் நீர் அருந்தவேண்டுமாம்.
ஆரோக்கிய கொழுப்பு உணவுகள்
எண்ணெய் மற்றும் துரித உணவுகளால் உடலில் உண்டாகும்.
கொழுப்பு என்றுமே ஆபத்தானது அதனால் அவகாடோ, பாதாம் போன்ற ஆரோக்கியமான கொழுப்பு சக்தி நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்.