யாழில் கொரோனாவை மீறி திருமணக்கொண்டாட்டம்; முகநூலால் சிக்கிய பலர்!
யாழ்.காரைநகரில் சுகாதார நடைமுறைகள் எவையுமில்லாமல் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. கடந்த புதன் கிழமை காரைநகர் அல்வின் வீதியில் குறித்த நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
அது தொடர்பிலான புகைப்படங்கள் முகநூல்களில் பகிரப்பட்டதன் ஊடாகவும் சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் ஒளிப்படங்களில் காணப்பட்டவர்கள் எவரும் முகக்கவசம் கூட அணிந்திருக்காத நிலையில் சுகாதாரத் துறையினர் அவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருப்பதாக சுகாதாரத் தரப்புக்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தும் அளவிற்கு நிலைமை மிகமோசமாகக் காணப்படும் சூழலில் மக்கள் இவ்வாறு பொறுப்பின்றி நடந்துகொள்வது சமூகத்திற்கு மிகவும் அச்சு
றுத்தலாக மாறுகின்றதாக பலதரப்பினரும் விசனங்களை வெளியிட்டுள்ளது.