பொலிஸ் தடையகற்றல் சான்றிதழுக்கான இணையத்தள முறைமை மீண்டும் இயல்பு நிலைக்கு
தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியிருந்த பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் (Police Clearance Certificate) விண்ணப்பிப்பதற்கான இணையத்தள முறைமை (Online System) தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் (16) முதல் மீண்டும் இணையத்த முறைமையின் ஊடாக பொலிஸ் தடையகற்றல் சான்றிதழுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பதாரர்கள் பொலிஸ் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குப் பிரவேசித்து, தமது விண்ணப்பங்களை இணையத்தளத்தில் சமர்ப்பிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
சான்றிதழ் அறிக்கைகளைக் கோரும் இணையத்தள தரவு முறைமையில் ஏற்பட்ட இந்த முடக்கம் காரணமாக, கடந்த நாட்களில் விண்ணப்பதாரர்களுக்கு பொலிஸ் தடையகற்றல் சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.