அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ளது.
அதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் நாளை (31) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அந்தமான் கடற்பரப்பில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை அந்தமான் கடற்பரப்பில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக, மறு அறிவித்தல் வரை குறிப்பிட்ட கடற்பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு மீன்பிடி மற்றும் கடற்படை சமூகத்திற்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, வட அட்சரேகை 10 முதல் 15 வரையிலும், கிழக்கு தீர்க்கரேகை 80 முதல் 90 வரையிலும் அமைந்துள்ள கடற்பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.