ஈரான் ஜனாதிபதி மரணத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை; திட்டவட்டமாக மறுக்கும் இஸ்ரேல்!
ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி (Ebrahim Rais) மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை, தாங்கள் காரணமும் அல்ல என இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Rais), அஜர்பைஜான் எல்லையில் அணைகள் திறப்பு விழா நிகழ்வுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
உலக நாடுகளை உலுக்கிய ரைசி மரணம்
பல மணிநேர நீண்ட தேடுதலின் பின்னர் ரைசி உள்ளிட்ட 8 பேர் ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் உயிரிழந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசியின் (Ebrahim Rais) மரணம் உலக நாடுகளை உலுக்கி இருக்கிறது.
இஸ்ரேல்- ஹமாஸ் யுத்தம் அதிதீவிரமாகி, இஸ்ரேல்- ஈரான் யுத்தமாக உருமாறிக் கொண்டிருக்கிறது. இதுவே 3-வது உலகப் போர் உருவாகவும் காரணமாக வெடித்துக் கொண்டிருக்கிறது.
இந்த தருணத்தில் ஈரான் ஜனாதிபதியின் (Ebrahim Rais) மரணத்துக்கு இஸ்ரேல்தான் காரணம்; இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்புதான் ரைசியை படுகொலை செய்துவிட்டதாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
அதேநேரத்தில் இஸ்ரேல், இந்த சந்தேகங்களை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இது தொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனங்களிடம் பேசிய இஸ்ரேல் அதிகாரிகள், ரைசி (Ebrahim Rais) ஹெலிகாப்டர் விபத்துக்கு நாங்கள் காரணம் அல்ல; இது எங்களுடைய நடவடிக்கையும் அல்ல என திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
கடந்த மாதம் சிரியாவில் ஈரானின் தூதரகம் மீது சரமாரியாக ஏவுகணைத் தாக்குதலை நடத்தி இராணுவ தளபதி உள்ளிட்ட 13 வீரர்களை இஸ்ரேல் படுகொலை செய்தது. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்தச் சூழலில் ரைசியின் (Ebrahim Rais) மரணம் நிகழ்ந்திருப்பதால் இஸ்ரேல் பக்கமே உலக நாடுகளின் சந்தேக திரும்பியுள்ள நிலையில்,
ஈரான் அதிபர் ரைசி மரணத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துள்ளது.