துப்பாக்கி முனையில் நாம் கட்டுப்படுத்தவில்லை
வடக்கில் அத்துமீறும் இந்திய படகுகளை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை என வட மாகாண கடற்படை தலைமையகத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வரும் நிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் வினவப்பட்டது.
அதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்திய மீனவர்கள் அதிகளவில் வருவதனால் தம்மால் அவர்களை கட்டுப்படுத்த தேவையான வளங்கள் தம்மிடம் இல்லை என்றும் அதனை இராஜதந்திர முறையில் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
இருப்பினும் இந்திய மீனவர்கள் அத்துமீறலை தொடர்ந்தும் கட்டுப்படுத்தி வருவதாகவும் கடந்த வருடம் மாத்திரம் 12ஆயிரம் கிலோ கேரளா கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.