ரணிலுக்கு பிணை வழங்ககூடாது ; சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.
இன்று (26) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பாக மேலதிக சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் ஆஜரானார்.
சந்தேகநபரான ரணில் விக்ரமசிங்கவின் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன மற்றும் அனுஜ பிரேமரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு ஆஜரானது.
இருப்பினும், ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்குவதை சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்த்துள்ளது.
இதற்கிடையில், அழைப்புப் பத்திரத்தின் சட்டப்பூர்வ தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று மேலதிக சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.