அதிபரை அடித்த ஆசிரியை எமக்கு வேண்டாம்; ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி பெற்றோர் போர்க்கொடி!
அதிபரை அடித்த ஆசிரியை எமக்கு வேண்டாம் என தெரிவித்து திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரியில் பெண் ஆசிரியர் மற்றும் பாடசாலை சமூகத்தினருக்கு இடையில் நேற்றையதினம் இடம்பெற்ற முறுகல் நிலை தொடர்பில் இன்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதிபரை அடித்த ஆசிரியை எமக்கு வேண்டாம் என தெரிவித்து இந்த போராட்டம் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆசிரியை அணிந்து வந்த உடை தொடர்பில் பிரச்சினை எழுந்ததை அடுத்து பாடசாலையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து அங்கு ஒன்று சேர்ந்த பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் எதிர்ப்பினை வெளியிட்டதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
இந்தநிலையில் குறித்த ஆசிரியர், பாடசாலைக்கு வேண்டாம் என தெரிவித்து இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
1) கிழக்கில் பிரபல பாடசாலையில் வெடித்த சர்ச்சை; வீதிக்கு இறங்கிய பாடசாலை மாணவர்கள்!
2) திருகோணமலை பிரபல பெண்கள் பாடசாலை அதிபர் மீதான தாக்குதல் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்!


