முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் சொகுசு மாளிகையில் நீர் வெட்டு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரப்பூர்வ விஜேராம இல்லத்தின் ஒரு பகுதியில், பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ள பகுதியில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
ரூ.429,000 நீர் கட்டணங்கள் செலுத்தப்படாததால் இந்த இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்படும் சலுகைகளில் ஒன்றான இந்தத் தொகையை ஜனாதிபதி செயலகம் செலுத்த வேண்டும்.
"முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அரசாங்கத்தால் ஒதுக்கப்படுவதால், தண்ணீர் மற்றும் மின்சாரம் உட்பட அத்தகைய அனைத்து கட்டணங்களுக்கும் பணம் செலுத்துவது அரசின் பொறுப்பாகும்" என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செய்தித் தொடர்பாளர் மனோஜ் கமகே தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி வசிக்கும் பகுதிக்கான நீர் விநியோகம் பாதிக்கப்படாமல் இருப்பதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புசபையினர் தெரிவித்தார்.
கடந்த ஒக்டோபர் முதல் குவிந்து வரும் செலுத்தப்படாத பில் தொகை ரூ.429,000 என்று அவர் கூறினார்.
இந்த இடையூறு முன்னாள் ஜனாதிபதி அல்லது இல்லத்தில் உள்ள பிற ஊழியர்களைப் பாதிக்காது என்று தெளிவுபடுத்தினார்.