குளவி தாக்குதலில் உயிரிழப்பு; நால்வர் வைத்தியசாலையில்
Nuwara Eliya
Hospitals in Sri Lanka
Death
By Sulokshi
லிந்துலை லெந்தோமஸ் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான மேலும் 4 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்றைய தினம் தேயிலை தோட்டத்தில் தொழிலில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

உயிரிழந்தவர் லிந்துலை லெந்தோமஸ் பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவர் என தெரியவந்துள்ளது.
மேலும் குளவிக் கொட்டுக்கு இலக்கான 4 தொழிலாளர்கள் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US