நாட்டின் பல மாகாணங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாட்டின் பல மாகாணங்களில் இன்று (19) பிற்பகல் கடும் மின்னல் தாக்கத்துடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி மேல், சபரகமுவ, மத்திய, வடமத்திய, தென், ஊவா, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மன்னார் மாவட்டம் ஆகிய பகுதிகள் அதிக பாதிப்புக்குள்ளாகக்கூடிய இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இடியுடன் கூடிய மழை பெய்யும்
குறித்த பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.
அத்துடன், பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்களைத் தவிர்த்துக்கொள்ள பொதுமக்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பொதுவெளிகளிலும், மரங்களுக்கு அடியிலும் இருப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.