யாசகம் பெற குழந்தைகளை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
இலங்கையில் குழந்தைகளைப் பயன்படுத்தி யாசகம் பெறும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த தயங்க மாட்டோம் என கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர்பியல் நிஷாந்த த சில்வா தெரிவித்துள்ளார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வளாகத்தில் நேற்று (5) நடைபெற்ற ’அனைத்திற்கும் முன்னுரிமை குழந்தைகள்’ என்ற 2021 உலக சிறுவர் தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்று இதனை இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த த சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை தெருவில் இருக்கும் குழந்தைகளை கையாள்வதற்கு நீதி அமைச்சகத்துடன் இணைந்து பொலிஸ் உதவியுடன் குறுகிய காலத்தில் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் குறித்த திட்டம் செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சிறுவர் துஷ்பிரயோகம் குறித்த தேசிய தரவுத்தளத்தை அறிமுகப்படுத்துதல், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப NCPA website (mobile friendly)என்ற ஆங்கில இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.