மணல் ஈ தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!
நாவுல – நாலந்த, உடுதெனிய, நாவுல நகரப் பகுதி மற்றும் செனகம கிராமத்தைச் சேர்ந்த மக்கள் லீஷ்மேனியாசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டுளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி நாவுல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பல கிராம சேவை களங்களில் மணல் ஈ கடியால் லீஷ்மேனியாசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக நாவுல பொது சுகாதார பரிசோதகர் தெரிவிக்கின்றார்.
தோலில் வலியற்ற காயங்கள்
மாத்தளை மற்றும் தம்புள்ளை ஆரம்ப வைத்தியசாலைகளில் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை ஆராய்ந்த போது இந்த தகவல் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் நாவுல பொதுச் சுகாதார பரிசோதகர் வைத்தியர் விஜித ஏகநாயக்க தெரிவிக்கையில், தோலில் வலியற்ற காயங்களை கணக்கில் கொள்ளாமை போன்ற காரணங்களினால் பல நோயாளர்களுக்கு இந்த நோயினால் அதிக காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பொதுமக்கள் தமது வீட்டைச் சுற்றியுள்ள சூழலை சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலமும், சுகயீன நிலையைக் கண்டால் உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொள்வதன் மூலமும், சுற்றுப்புறச் சூழல் தொடர்பில் அவதானமாக இருப்பதன் மூலமும் இந்த நோயிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் வைத்தியர் விஜித ஏக்கநாயக்க தெரிவித்தார்.