மீனவர்களுக்கு வந்த எச்சரிக்கை
வங்காள விரிகுடாவைச் சூழவுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது கிழக்கு மற்றும் வடகிழக்குத் திசையை நோக்கி நகர்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக குறித்த கடற்பரப்புகளில் இடியுடன் கூடிய மழையும் பலத்த காற்றும் வீசுவதுடன் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக குறித்த கடற்பரப்பில் தற்போது மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளி மண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத் துள்ளது.
அதோடு குறித்த கடற்பரப்பில் ஏற்கனவே மீன்பிடியில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாக கரைக்கு அல்லது பாதுகாப்பான இடத்துக்கு வருமாறு அறிவுறுத்தப்பட் டுள்ளனர்.