பலத்த இடி மின்னல் தொடர்பில் எச்சரிக்கை
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (20) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பலத்த மின்னல் தாக்கங்களுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இடியுடன் கூடிய மழையின் போது திறந்த வெளிகள், நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் அல்லது நீர்நிலைகளில் தங்கியிருப்பதைத் தவிர்க்கவும். மரங்களின் கீழ் தஞ்சம் அடைவதைத் தவிர்த்து, பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கத்தின் போது கம்பி மூலம் இணைக்கப்பட்ட தொலைபேசிகள் மற்றும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
துவிச்சக்கர வண்டிகள், உழவு இயந்திரங்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களில் பயணிப்பதைத் தவிர்க்கவும். வீழ்ந்து கிடக்கக்கூடிய மரங்கள் மற்றும் மின்சாரக் கம்பிகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
அவசர காலங்களில் உதவியைப் பெற்றுக்கொள்ள உள்ளூர் இடர் முாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.