விஜய் தொடர்பில் நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சனம்; உங்களுக்கு பொறாமையா? பதிலடி கொடுத்த மூத்த நடிகை!
தவெக தலைவர் விஜய் தொடர்பில், நடிகரிடம் நாட்டை கொடுக்க முடியாது என விமர்சனங்களை விஜயின் மீது வைத்த பிரகாஷ்ராஜ் இற்கு, நடிகை அம்பிகா பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக அரசியல் வரலாற்றில் திரைத்துறையிலிருந்து பலரும் அரசியலுக்கு வந்திருந்தாலும் எம்ஜிஆருக்கு பின் அதிக கூட்டம் கூடுவது தவெக தலைவர் விஜய்க்கு என்றுதான் சொல்ல வேண்டும்.

கமல் சாரோ அல்லது ரஜினி சாரோ முதலமைச்சரான ஓகேவா?
தவெக தலைவர் விஜய் எங்கு சென்றாலும் அவரை பார்க்க பொதுமக்களும், விஜய் ரசிகர்களும், பெண்களும் கூடி விடுகிறார்கள். தனது ரசிகர்களை நம்பியே அரசியல் கட்சி துவங்கியிருக்கிறார் விஜய்.
துணிச்சலோடு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 233 தொகுதிகளில் அவரின் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுகிறது.. அதேவேளை சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வந்த விஜய்க்கு திரைதுறையில் பெரிய ஆதரவு இல்லை.
சீனியர் நடிகர்களான ரஜினி, கமல் பட திமுகவின் ஆதவாளராகவே செயல்படு வருகிறார்கள். ஒருபக்கம், நடிகர் பிரகாஷ் ராஜ் விஜய்க்கு எதிராகவும், திமுகவுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
விஜய்க்கு அரசியல் அனுபவமும் இல்லை.. சினிமாவில் வேண்டுமானால் அவர் முதல்வராகலாம். நிஜத்தில் முடியாது. என்னுடைய அளவுக்கு கூட விஜய் அரசியல் பேசவில்லை.. நடிகரிடம் நாட்டை கொடுக்க முடியாது’ என பல விமர்சனங்களை விஜயின் மீது வைத்தார் பிரகாஷ்ராஜ்.
இந்நிலையில், பிரகாஷ்ராஜுக்கு பதிலடி கொடுத்துள்ள நடிகை அம்பிகா ‘மிஸ்டர் பிரகாஷ்ராஜ்.. ஏழையாக இருந்து பணக்காரணாக மாற ஒரு பாட்டு போதும் முழுபடமும் தேவையில்லை.
அண்ணாதுரை, எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞர், என்டி ராமராவ், ஏன் நமது முதலமைச்சர், துணை முதல்வர் இவர்கள் யாரும் சினிமாக்காரங்க இல்லையா? ஒருவேளை உங்களுக்கு கமல் சாரோ அல்லது ரஜினி சாரோ முதலமைச்சரான ஓகேவா?.. உங்களுக்கு பொறாமையா? இல்ல வருத்தமா?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் நடிகை அம்பிகா.