12 மாவட்டங்களில் வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை!
நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று (06) வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.08 மணியளவில் அகுன்கல்ல, எல்பிட்டி, அமுகொடை, தவளம, தெனியாய, ஊறுவொக்க, எம்பிலிபிட்டிய, சூரியவெவ, வெரலிகல மற்றும் கல்கடுவ போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது.
முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிறப்பு கவனம்
அதேசமயம் இன்றும் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.
எனவே அதிக நீர் பருகுதல், கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளைக் தவிர்த்தல், வெளிர் நிற ஆடைகளை அணிதல் மற்றும் குழந்தைகளை வாகனங்களில் கூட்டி செல்வதைத் தவிர்த்தல் போன்ற செயற்பாடுகளிலிருந்து பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை அதிக வெப்பநிலை காரணமாக முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.