சிவனொளிபாத மலை செல்பவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை
சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்திரிகர்கள் மிகவும் அவதானமாக செல்லுமாறு நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நுவரெலியா - மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மதிய வேளையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது வருகிறது.

அதிக அளவில் மழை
இதன் காரணமாக சிவனொளிபாத மலை பகுதியில் உள்ள படிகளில் அதிக அளவில் மழை நீர் வருவதால் சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்திரிகர்கள் மிகவும் அவதானமாக செல்லுமாறு நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் அதிக அளவில் சிவனொளிபாத மலைக்கு செல்வதை காணக்கூடியதாக உள்ளது.
அவ்வாறு செல்லும் யாத்திரிகர்கள் மிகவும் அவதானமாக மலைக்கு செல்ல வேண்டும்.
இல்லாவிடின் மழை பெய்தது வரும் வேளையில் சிவனொளிபாத மலைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் சியத்த கங்குல ஓயாவில் மழை பெய்யும் வேளையில் நீராட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.