தமிழர் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாய்க்கு அதிகாலையில் அரங்கேறிய அவலம்
அம்பாறையில் தனது வீட்டு முற்றத்தில் வைத்து யானையினால் தாக்கப்பட்டு குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீத்புரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை
சம்மாந்துறை பகுதி மஜீத்புரம் மல்வத்தை-03 முகவரியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தயான 48 வயது மதிக்கத்தக்க குடும்ப பெண் சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.
மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இது தவிர யானை தாக்கி உயிரிழந்த குடும்ப பெண் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒரு காலில் முறிவு ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.