இலங்கையில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் 25 வயதுக்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை போதனா மருத்துவமனையின் விசேட நரம்பியல் நிபுணர் மருத்துவர் சுரங்கி சோமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
பக்கவாத நோய்
எதிர்வரும் 29 ஆம் திகதி நினைவுகூறப்படவுள்ள உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 30 வீதமானவர்கள், 20 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.
அத்துடன், பக்கவாதம் ஏற்பட்டவர்களில் சுமார் 50 சதவீதமானோருக்கு, பக்கவாதம் ஏற்படுவதற்கு உயர் இரத்த அழுத்தமும் ஒரு காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பக்கவாதத்தை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உரிய நேரத்தில் மருந்துகளை எடுத்துக் கொள்வதையும் சுகாதார பரிசோதனைகளை மேற்கொள்வதையும் உறுதிசெய்ய வேண்டும் என நரம்பியல் நிபுணர் மருத்துவர் சுரங்கி சோமரத்ன வலியுறுத்தியுள்ளார்.