சிறுவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
சிறுவர்கள் நாளின் பெரும் பகுதியை இலத்திரனியல் சாதனங்களுடன் திரையுடன் கழித்தால், அவ்வாறான சிறுவர்களின் பகுத்தறியும் திறனும் அறிவுத்திறனும் குறைவது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இத்தகவலை உடலியல் நிபுணர் மருத்துவர் வருண குணதிலக்க குறிப்பிடுகின்றார்.
இந்தச் சாதனங்கள் வெளியிடும் நீல ஒளி மூளையின் சில பகுதிகளில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறமை தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வளர்ச்சிக்கு இடையூறு
எனவே இரண்டு மணிநேரம் அல்லது தூங்கும் முன்னதாக குழந்தைகளை இது போன்ற மின்னணுச் சாதனங்களிலிருந்து விலக்கி வைப்பது கட்டாயம் என்றும் அவர் கூறினார்.
1-12 வயதுக்குள் குழந்தையின் மூளையின் முன் பகுதியின் சில பகுதிகள் வளர்ச்சியடைவதால், இந்தக் காலகட்டத் தில் கையடக்கத் தொலைபேசி அல்லது மடிக்கணினிக ளைக் கொடுப்பது அதன் வளர்ச்சிக்கு இடையூறாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே இந்தக் காலகட்டத்தில் சாதனங்களை வழங்கக் கூடாது என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் கூட இவ்வாறு கூறியுள்ளதாக மருத்துவர் குணதிலக்க தெரிவித்தார்.