செவ்வாயால் உருவாகியுள்ள குல்தீபக் ராஜயோகம் ; பேரதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதோடு இந்த செவ்வாய் குல்தீபக் ராஜயோகத்தையும் உருவாக்குகிறார். இந்த ராஜயோகமானது செவ்வாய் 10 ஆவது வீட்டில் அல்லது அதன் சொந்த ராசியில் உச்சத்தில் இருக்கும் போது உருவாகும். இப்போது செவ்வாயால் உருவாகியுள்ள குல்தீபக் ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாயால் உருவாகும் குல்தீபக் ராஜயோகத்தால் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வேலையில் இருந்த தடைகள் நீங்கும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். இதுவரை சந்தித்து வந்த மன அழுத்தம் நீங்கும். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு இக்காலம் பயனுள்ளதாக இருக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். அதே வேளையில் செலவுகளும் கணிசமாக அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாயால் உருவாகும் குல்தீபக் ராஜயோகத்தால் இன்று முதல் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. முக்கியமாக வேலையில் இதன் தாக்கம் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். தனித்துவமான அடையாளத்தை உருவாக்குவீர்கள்.எதிரிகளுக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பீர்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு குல்தீபக் ராஜயோகத்தால் தொழிலில் நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் தீரும். வேலைகளில் இருந்த தடைகள் நீங்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நிதி நிலையில் கணிசமான உயர்வைக் காணக்கூடும். மேலும் நிறைய பணத்தை சேமிக்க முடியும். வணிகர்களுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும்.