உக்ரைன் எல்லையில் போர் பதற்றத்துக்கு நடுவே கவனம் ஈர்த்த விமானம்..!
உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் நிலவிவரும் நிலையில், உக்ரைன் நாட்டிற்கு அருகே உள்ள மால்டோவா நாட்டின் தேசிய விமான நிறுவனம் ஏர் மால்டோவாவின், பயணிகள் விமானம் ஒன்று மால்டோவா நாட்டின் தலைநகரான கிஷினேவில் இருந்து 'ரிலாக்ஸ்' (Relax) என்ற என்ற ஆங்கில வார்த்தையின் வடிவப் பாதையில் சென்றது.
அந்த வீடியோவை 'பிளைட் ரேடார்' என்ற விமானப் போக்குவரத்து கண்காணிப்பு இணையதளம் மூலம் நேரடி ஒளிபரப்பும் செய்தது. இந்த வீடியோவை பார்த்த பார்வையாளர்கள் உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான போர் பதற்றத்தை தணிக்கும் ஒரு முயற்சியை இதன்மூலம் மேற்கொள்கிறார்கள் என்று கருதினர்.
அத்துடன் பலரும் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வைரலாக்கினர்.
Rela...https://t.co/zhtzH7lQ9O pic.twitter.com/TdcLRKYUHU
— Flightradar24 (@flightradar24) February 17, 2022
ஆனால் உண்மையில் அந்த விமானம் ஒரு வானொலி நிலையத்திற்கான விளம்பரத்திற்காக அவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
ரேடியோ ரிலாக்ஸ் மால்டோவா என்ற அந்த வானொலி நிறுவனத்தின் தொடக்கத்தை வித்தியாசமாக மேற்கொள்ளும் முயற்சியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளதாக கூறப்படுகின்றது.
தலைநகர் கிஷினேவில் இருந்து மாலை 4.12 மணிக்கு கிளம்பிய அந்த விமானம் ஒரு மணிநேரம் 40 நிமிடங்கள் வானில் ரிலாக்ஸ் என்ற வடிவில் பயணம் செய்து 5.50 மணிக்கு மீண்டும் கிஷினேவில் தரையறங்கியதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.