உடல் எடை குறையணுமா இந்த ஒரு பொருளை உட்கொண்டாலே போதும்
வெயில் காலத்தில் நாம் தேடித்தேடி சாப்பிடும் உணவுகளில் வழுக்கை தேங்காயும் ஒன்று.
தேங்காய் ஓட்டுக்குள் இருக்கும் சதை மிகவும் சுவையாகவும் இனிப்பாகவும் இருப்பதோடு இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தற்போது இளநீர் பாயாசம், இளநீர் ஜூஸ், இளநீர் ஐஸ்கீரிம் மற்றும் வழுக்கை தேங்காய் இனிப்புகள் என பல உணவுகளாக சமைக்கப்பட்டு அனைவராலும் ருசிக்கப்படுகிறது.
சுவையான ருசி மட்டுமல்லாது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் இது கொண்டுள்ளது.
இளநீர் தேங்காய்களின் சதையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட வழுக்கை தேங்காயில் நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகள் (MCTகள்), லாரிக் அமிலம் மற்றும் பிற நன்மை பயக்கும் கலவைகள் நிறைந்துள்ளன.
உடல் எடையை குறைப்பது முதல் இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பது வரை ஏராளமான நன்மைகளை வழுக்கை தேங்காய் வழங்குகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
நிறைவுற்ற கொழுப்புகள் அதிகமாக இருந்தாலும் வழுக்கை தேங்காய் இதய ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கிறது. .
கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் இதய நோய்க்கான ஆபத்து காரணிகளை அதிகரிக்கின்றன.
வழுக்கை தேங்காயில் உள்ள நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகள்(எம்சிடி) கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகின்றன.
கூடுதலாக வழுக்கை தேங்காயில் உள்ள லாரிக் அமிலம் இரத்த அழுத்த அளவை மேம்படுத்துவதாகவும் இருதய நோய் அபாயத்தைக் குறைப்பதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எடை இழப்புக்கு நல்லது
எம்சிடிகள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.அவை ஆற்றல் செலவை அதிகரிக்கலாம் மற்றும் பசி உணர்வை குறைக்கலாம்.
மற்ற வகை கொழுப்புகளுடன் ஒப்பிடும்போது வழுக்கை தேங்காயை உணவில் சேர்ப்பது விரைவாக உடல் எடையை குறைக்கவும் மற்றும் இடுப்பு சுற்றளவு குறைவதற்கும் வழிவகுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்கும்
100 கிராம் புதிய வழுக்கை தேங்காயை தினமும் 80 நபர்களுக்கு கொடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
தினமும் வழுக்கை தேங்காயை சாப்பிட்ட இந்த 80 நபர்களுக்கும் இரத்த குளுக்கோஸ் அளவு குறைவதாக காட்டியது.
இதன் மூலம் டைப்-2 நீரிழிவு நோயைத் தடுக்க வழுக்கை தேங்காய் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செரிமானத்தை ஊக்குவிக்கிறது
வழுக்கை தேங்காயில் உணவு நார்ச்சத்து அதிகம் உள்ளது. நார்ச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்வது மேம்பட்ட செரிமானத்தை ஊக்குவிக்க உதவும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதிலுள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கவும், மலச்சிக்கலை தடுக்கவும் உதவுகிறது. கூடுதலாக தேங்காய் மல குடல் பாக்டீரியாவில் நேர்மறையான விளைவைக் கொண்ட கலவைகளைக் கொண்டுள்ளது. இது ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரியை ஊக்குவிக்கிறது.
கர்ப்பிணிகளுக்கு நன்மை பயக்கும்
குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு உதவும் வழுக்கை தேங்காயின் ஊட்டச்சத்துக் கலவை கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கும்.
குமட்டல் மற்றும் காலை சோம்பலை குறைக்க உதவும் வழுக்கை தேங்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.