ஜிம் போகாமல் வேகமா உடல் எடை குறைக்கனுமா? இந்த விஷயங்களை ட்ரை பண்ணி பாருங்க!
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் பருமனால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கான ஜிம், யோகா போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு காரணம், நாம் சாப்பிடும் உணவு முறை தான். உணவு முறை தான், நம்முடைய உடலை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. உடற்பயிற்சி வெறும் 20 சதவீதம் தான் உடல் எடையை குறைக்க உதவும். ஆனால், ஆரோக்கியமான உணவின் மூலம் நம்முடைய உடல் எடையை வெகுவாக குறைக்கலாம்.

உடல் எடையை குறைப்பது எப்படி?
எனவே, ஜிம் செல்லாமல் எப்படி உடல் எடையை குறைக்க என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
புரதம்: ஒவ்வொரு உணவில் ப்ரோட்டீன் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ப்ரோட்டீன் உடல் எடை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் நீங்கள் சாப்பிடும் உணவில் புரதம் இருக்க வேண்டும்.
கவனமாக சாப்பிடுவது: நாம் சாப்பிடும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். அதாவது, சுவை, வாசனையில் கவனம் செலுத்துவதை விட, பசி மற்றும் நினைவான உணர்வு தருவதற்கு சாப்பிட வேண்டும். சிறிய தண்டில் சாப்பிடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது உங்களது சாப்பாட்டின் அளவை குறைக்கும்.

சாப்பிடும் முறை: சாப்பிடும் முறையை மாற்ற வேண்டும். அதாவது, நாம் சாப்பிடும் போது சோறு, சாம்பார், பொறியல் என இருக்கும். அந்த நேரத்தில், சோறு, சாம்பருடன் பொறியலை வைத்து சாப்பிடுவோம். இதனை தவிர்க்க வேண்டும். முதலில் நீங்கள் எடுத்து கொள்ளும் ப்ரோட்டீன், அதாவது பொறியலை முழுவதுமாக சாப்பிட வேண்டும். அதன்பிறகு, கார்போஹைட்ரேட் சோறு சாப்பிட வேண்டும். அப்போது தான் நீங்கள் அளவோடு சாப்பிடுவீர்கள். புரதம் உங்கள் பசியை கட்டுப்படுத்தும்.
தூக்கத்தின் நேரம்: மோசமான தூகம் பசியை மிகவும் அதிகரிக்கும். எனவே, தினமும் சரியாக தூங்குவது உடல் எடையை குறைக்க பெரும் பங்கு வகிக்கிறது. எனவே, தினமும் இரவில் 10 மணிக்குள் தூங்க வேண்டும். மேலும், தினமும் குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது

சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது: சர்க்கரை அதிகம் உள்ள சாக்லேட், கேக், மில்க் ஷேக் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மேலும், பீட்சா, பர்கர் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதில் அதிகளவு கலோரி இருப்பதால் உடல் எடையை அதிகரிக்க செய்யும். குறிப்பாக, எடை குறைப்பு இருப்பது நீண்ட பயணம். குறைந்தது 6 முதல் 12 மாதங்கள் பின்பற்றினால் உங்கள் ரிசல்ட் கிடைக்கும்.