நீரிழிவு நோயை வாழ்நாள் முழுவதும் கட்டுக்குள் வைக்க விருப்பமா? இந்த தேநீர் மட்டும்போதும்!
பொதுவாகவே பெரும்பாலானவர்கள் காலையில் எழுந்ததும் தேநீர் அருந்தினால் மட்டுமே அன்றைய தினத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் . ஆனால் அளவிற்கு அதிகமாக தேநீர் பருகுவதும் நமது உடலில் ஏகப்பட்ட பிரச்சினையை கொண்டு வரும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் தேநீர் பருகுவதை தவிர்க்கவே வேண்டும் ஏன பரிந்துரைக்கப்படுகின்றது.

எனினும் சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து தயாரிக்கும் மூலிகை டீ-யே உங்களுக்கு பெரும் அருமருந்தாக இருக்கும் என்பதுடன் நீரிழிவு நோயாளிகள் அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்து வந்தால் நிச்சயம் சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் எனவும் கூறப்படுகின்றது.
அந்த வகையில்,
ஜின்ஸெங் தேநீர்;
வேர் தாவரமாக காணப்படும் ஜின்ஸெங் பல மருத்துவ பலன்களை கொண்டதுடன், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி, மத்திய நரம்பு மண்டலத்தையும், மன அழுத்தத்தையும் குறைக்கின்றது.

ஆக்ஸிஜனேற்ற செயல்பாடுகளை மேம்படுத்துதவும் பயன்படுத்தும் இந்த தாவரம், நீரிழிவு நோயாளிகளுக்கு மாற்று மருந்தாக இருக்கின்றது. ஆம் ஜின்ஸெங் தேநீர் நீரிழிவு நோயாளிகள் பருகினால் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க முடியும்.
கற்றாழை தேநீர்:
பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் முக்கிய பங்கை பெற்றுள்ள கற்றாழை உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் பழங்கால மூலிகை ஆகும்.
பச்சையாக அல்லது வேக வைத்து என எப்படி பயன்படுத்தினாலும் இது உடலுக்கு நன்மை அளிக்கும் என்றாலும், நீரிழிவு நோயாளிகள் இதன் ஜெல்லை எடுத்து நீரில் வேகவைத்து தேநீராக பருகினால் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம்.

இதேவேளை மேலே கொடுக்கப்பட்ட இந்த இரண்டு தேநீர் மட்டுமின்றி, செம்பருத்தி, இலவங்க பட்டை, மஞ்சள், எலுமிச்சை இவற்றிலும் தேநீர் தயாரித்து பருகினால் நீரிழிவு நோய் குறித்து கவலை வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு இல்லாமல் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.