பணமும், நகையையும் உங்களை தேடி வர வேண்டுமா அப்போது இதனை செய்யுங்கள்
பணமும், நகையையும் நம்மை தேடி வர மகாலட்சுமியின் அருள் நமக்கு தேவை. மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைக்க அவர்களுக்கு பிடித்த பொருட்களை வைத்து சிறிய பரிகாரத்தை செய்யும் போது இவைகள் நமக்கு கிடைக்க மகாலட்சுமிஆசி வழங்குவார் என்று சொல்லப்படுகிறது.
நம் கையில் நகை, பணம் தங்க வேண்டும் என்றால் அதற்கு நிச்சயமாக மகாலட்சுமி தாயாரின் ஆசீர்வாதம் வேண்டும்.
மகாலட்சுமியின் அருள் கிடைக்க வேண்டும் என்றால் அவர்களை நம் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய வைக்க வேண்டும்.
வெற்றிலை பரிகாரம்
அதற்கு தான் இந்த வெற்றிலை பரிகாரம். இந்த பரிகாரத்தை செய்யும் போது மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருள் கிடைத்து நீங்கள் வேண்டும் பணம் நகையெல்லாம் உங்களை வந்து அடைய வழி பிறக்கும் என்று கூறப்படுகிறது.
பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள்
இந்த பரிகாரத்தை செய்ய நாள் கிழமை எதுவும் கிடையாது எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இந்த பரிகாரத்திற்கு தேவை ஒரு வெற்றிலை, புனுகு, அரகஜா, இந்து உப்பு, அருகம்புல், தர்ப்பை புல், மூன்று கொட்டை பாக்கு, பச்சைக் கற்பூரம், மஞ்சள் நூல்.
இந்த பரிகாரம் செய்வதற்கு முதல் நாளே இவை எல்லாம் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொருட்கள் அனைத்துமே நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.
எவ்வாறு செய்ய வேண்டும்
இந்த பரிகாரத்தை செய்ய காலையில் எழுந்து குளித்து பிறகு பூஜை அறையில் அப் பொருட்களை மகாலட்சுமியின் படத்திற்கு முன்பாக வைத்து "பணமும் நகையும் எங்களுக்கு தாராளமாக கிடைக்க வேண்டும் என்றும், அதை சம்பாதிக்கவும் சேர்க்கவும் உங்களின் அருள் வேண்டும் என்றும்" மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
அப் பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக வைத்து வெற்றிலையை மடித்து காம்பு மேலே தெரியுமாறு மஞ்சள் நூலை வைத்து கட்டி, மகாலட்சுமி தாயாரின் முன் வைத்து வணங்கி பூஜை அறையில் வைத்து விடுங்கள்.
இது ஒரு நாள் முழுவதும் உங்கள் பூஜை அறையில் இருக்க வேண்டும்.அடுத்த நாள் இதை எடுத்து நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும்.
வெற்றிலை காய்ந்தவுடன் வேறு புது வெற்றிலை மாற்றி அதையும் இதே போல் பூஜை அறையில் வைத்து வணங்கிக் கொள்ளுங்கள்.
இந்த பொருள் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி தாயார் இந்த வாசனை திரவியங்களுக்கு மயங்கி அங்கு வந்து அமர்ந்து கட்டாயம் உங்களுக்கு செல்வ வளத்தை வாரி வழங்குவார் என கூறப்படுகிறது.