சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ; கட்டாயமாகும் நடைமுறை
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் 'பொது போக்குவரத்து அனுமதியை பெறுவது கட்டாயம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (20) அம்பாறையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அனுமதிப்பத்திரம்
அனுமதிப்பத்திரத்திற்கான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அதன்படி, பொது போக்குவரத்து சாரதிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் அனுமதிப்பத்திரத்தைப் பெற வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இப்போது சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சில பேருந்துகள் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட போதே சீட் பெல்ட்கள் இல்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் பேருந்துகளை அலங்கரிக்க முடியும் என்றால் ஏன் சீட் பெல்டை பொருத்த முடியாது?
இப்போது சில சாரதிகள் என்னையும் பொலிஸாரையும் ஏமாற்ற தங்கள் பிள்ளைகளது பாடசாலை பைகளின் பெல்ட்களை அணிந்து வருகின்றனர். அவ்வாறானவர்களிடம் 50 பயணிகளை ஒப்படைப்பது பொருத்தமானதல்ல. எனவே நாம் ஒரு முடிவை எடுத்துள்ளோம்.
பொதுப் போக்குவரத்தில் ஒவ்வொரு சாரதியும் பொதுப் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தைப் பெறுவது கட்டாயமாகும்.
நாங்கள் இதற்கான திட்டங்களை வகுத்துள்ளோம், டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் அவர்கள் நிச்சயமாக அந்த அனுமதிப் பத்திரத்தை பெறவேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.