அவுட்டான விரக்தியில் விராட் கோலி செய்த செயல்!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஓவல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 96 பந்துகளுக்கு 44 ரன்கள் குவித்து அவுட்டானார்.
இந்நிலையில் அவர் பெவிலியன் திரும்பியதும் அவுட்டான விரக்தியில் கோலி, டிரெஸ்ஸிங் ரூம் கதவை ஓங்கி குத்தியுள்ளார் . மிகவும் நேர்த்தியாக இன்னிங்ஸை அணுகிய கோலி மூன்று இலக்க ரன்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
Virat Kohli, come back soon King.#ENGvIND pic.twitter.com/ffgRH64FvH
— Neelabh (@CricNeelabh) September 5, 2021
ஆடுகளமும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்த காரணத்தினால் அது கைக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோலியும் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடினார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக கோலியின் பேட்டில் பட்ட பந்து ஸ்லிப் ஃபீல்டரின் கைகளில் தஞ்சமடைந்தது.
அந்த ஓவரை மொயின் அலி வீசியிருந்தார். கோலி பந்து ஸ்பின்னாகும் என எதிர்பார்த்து பேட்டை வைக்க, பந்து பெரிய அளவில் சுழலாத காரணத்தினால் அவர் அவுட்டானார்.