சமூக வலைத்தளங்களில் வைரலான குரங்கு குட்டி; கூட்டத்துடன் இணைந்ததால் ஆனந்தம்!
தனித்து , குரங்கு பொம்மையுடன் திரிந்து பெருமளவு இணையவாசிகளின் மன்ம் கவர்ந்த குரங்குட்டி தற்போது குரங்கு கூட்டத்துடன் இணைந்துள்ள காணொளி வெளியாகியுள்ளது.
ஜப்பானில் உள்ள ஓர் உயிரியல் பூங்காவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மக்காவ் வகை குரங்கு குட்டிகளை ஈன்றது. இதில் ஒரு குட்டியை மட்டும் அந்த தாய் குரங்கு விரட்டியது.

மீண்டும் குரங்குக் கூட்டத்துடன்
உயிரியல் பூங்கா நிர்வாகிகள் அந்தக் குட்டிக் குரங்குக்கு தனியிடத்தை ஏற்பாடு செய்து அது விளையாடி மகிழ உர்ராங் உடான் வகை குரங்கு பொம்மையைக் கொடுத்தனர்.
இந்தக் குரங்குக் குட்டிக்கு `பஞ்ச்' என்று பெயர் வைத்தனர். அந்த பொம்மையுடன் குட்டிக் குரங்கு விளையாடி வந்த வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது .
மக்காவ் குரங்குகள் மிகவும் புத்தி கூர்மையானவை. பனி பிரதேசத்தில் வாழும் இவை, உணவுகளை கழுவி உண்ணவும், உப்பு சுவைக்காக கடல் நீரை சேர்த்துக்கொள்ளவும் தெரிந்து வைத்துள்ளன. மனிதர்களை போல உடலை சூடாக வைத்துக்கொள்ள வெந்நீர் தொட்டிகளில் இவை குளிக்கின்றன.
Baby punch getting the love he deserves pic.twitter.com/3nLmMhRJ9s
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) February 22, 2026
இது குறித்து உயிரியல் பூங்கா காப்பாளர் கோசுக்கே ஷிகானோ கூறும்போது, “பஞ்ச் குரங்குக்குட்டிக்கு இப்போது ரசிகர்கள் அதிகமாகி விட்டனர். உர்ராங் உடான் குரங்கு பொம்மையுடன் பஞ்ச் விளையாடி வருகிறது.
பிற்காலத்தில் இது தனது இனத்தோடு சேர்ந்து வாழ இந்த பொம்மை உதவும்" என்றார். குரங்குக்குட்டியை வாங்குவதற்கு பிரபல தொழிலதிபர் டிரிஸ்டன் டேட் முன்வந்துள்ளார். இதற்காக 25 ஆயிரம் டாலர் தரவும் அவர் முன்வந்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஊடகவியலாளரும், தொழிலதிபருமான எமோரி ஆண்ட்ரூ டேட்டின் தம்பிதான் இந்த டிரிஸ்டன் டேட். இந்நிலையில் குட்டிக்குரங்கு பஞ்ச் தனது குரங்குக் கூட்டத்துடன் மீண்டும் ஒன்றிணைந்துள்ளது.
குரங்குக் கூட்டத்தில் உள்ள குரங்குகளுடன் அது இணைந்து விளையாடி வருகிறது. இதுதொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன.