லிவ்-இன் உறவில் விரிசல்; காதலியின் உறுப்பை கொளுத்திய கொடூரக் காதலன்
லிவ்-இன் உறவில் விரிசல் ஏற்பட்டதால் காதலன் காதலியின் அந்தரங்க உறுப்பை எரித்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் நடந்தேறியுள்ளது.
இந்த சம்பவம் நவீன டேட்டிங் செயலிகள் மற்றும் லிவ்-இன் உறவுகளுக்குப் பின்னால் தற்போதைய இளம் தலைமுறையினருக்கு பெரும் ஆபத்தான பக்கத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவ்ருகையில்,

தனியாக வீடு எடுத்து லிவ்-இன் உறவில் வாழ்க்கை
இந்தியாவின் திரிபுராவைச் சேர்ந்த 19 வயது மாணவி, குருகிராமில் தங்கி பிஎஸ்சி பயோ டெக்னாலஜி படித்து வந்துள்ளார். ஒன்லைன் டேட்டிங் செயலி மூலம் டெல்லி நரேலாவைச் சேர்ந்த சிவம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
திருமணம் செய்துகொள்வதாகச் சிவம் அளித்த வாக்குறுதியை நம்பி, இருவரும் குருகிராமில் தனியாக வீடு எடுத்து லிவ்-இன் உறவில் இருந்து வந்துள்ளனர். பெப்ரவரி 16 அன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், சிவம் அந்தப் பெண்ணைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
வக்கிரத்தின் உச்சமாக, அந்தப் பெண்ணின் அந்தரங்க உறுப்பில் சானிடைசரை ஊற்றித் தீ வைத்ததுடன், அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.
உயிருக்குப் போராடிய மாணவி தனது தாய்க்குத் தகவல் அளிக்க, பொலிஸார் விரைந்து சென்று அவரை மீட்டுள்ளனர்.
குற்றவாளி சிவத்தைக் கைது செய்துள்ள பொலிஸார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைகள் முன்னெடுக்கபப்டுவதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.