விஜய் கண்டிப்பாக மீண்டும் நடிக்க வருவார்; நடிகை ஆரூடம்!
சினிமாவை விட்டு விலகப்போவதாக சொல்லும் விஜய்யுடன் நான் நடிப்பேன். விஜய் கண்டிப்பாக அடுத்த ஆண்டு தேர்தலுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருவார் என நடிகை சிந்தியா லூர்டே கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதுவும் எனது தயாரிப்பில் உருவாகும் படத்தில் அவர் நடிப்பார் என்றும், அது எப்படி நடக்கும் என்று தெரியாது, ஆனால் நிச்சயமாக நடக்கும் என்றும் நடிகை சிந்தியா கூறியுள்ளார்.

அது எப்படி நடக்கும் என்று தெரியாது...ஆனால் நிச்சயமாக நடக்கும்
மூன்றாம் உலகப்போர் பற்றிய சிந்தனையில் புதிய கதையம்சத்துடன் ‘அனலி’ என்ற திரைப்படம் தயாராகி உள்ளது. இந்த படம் வரும் ஜனவரி 2-ந்தேதி வெளியாக உள்ளது.
தினேஷ் தீனா இயக்கியுள்ள இந்த படத்தில் டைரக்டர் வாசுவின் மகன் சக்தி வாசு வில்லனாக நடித்துள்ளார். சிந்தியா புரொடக்ஷன் ஹவுஸ் சார்பில் தயாரிக்கப்படும் இந்த படத்தில் கதையின் நாயகியாக சிந்தியா லூர்டே நடித்துள்ளார்.
நடிகர் விஜய் இன் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9 ஆம் திகதி வெளிவரவுள்ள நிலையில், அதன் ஆடியோ லாஞ்ச் மிக பிரம்மாணமாக மலேசியாவில் இடம்பெற்றது.
இதுவே தனது கடைசிப்படம் என விஜய் முன்பே அறிவித்ததுடன், தமிழக வெற்றிக்கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகின்றார்.
2026 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் வேட்பாளராக தேர்தலில் விஜய் களமிறங்குகின்றார். இந்நிலையில் தேர்தலுக்குப் பிறகு நடிகர் விஜய் மீண்டும் நடிக்க வருவார் என நடிகை சிந்தியா கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.