விஜய் தமிழக முதலமைச்சராக வர வேண்டும் ; நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன்
விஜய் அரசியலில் ஜெயிக்க வேண்டும் . அரசியல் என்ற வகையில் விஜய் தமிழக முதலமைச்சராக வர வேண்டும்.என நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் தெரிவித்துள்ளார்.
தனது முகபுத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் வர வேண்டிய ஒருவர்.
குறித்த பதிவில்
விஜய் அரசியலில் ஜெயிக்க வேண்டும் . அரசியல் என்ற வகையில் விஜய் தமிழக முதலமைச்சராக வர வேண்டும்.
இப்போது அல்ல அப்போதே இலங்கையில் அனுரவும் இந்தியாவில் மோடியும் தமிழகத்தில் விஜயும் தலைவர்களாக வர வேண்டும் என்றேன்.
இலங்கையில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக விஜய் அரசியலில் அதி சக்தி மிக்கவராக வர வேண்டும் என விரும்புகிறேன். ஏற்கனவே விஜயகாந்த் வர வேண்டிய ஒருவர். ஆனால் ஏதோ சதி நடந்து விட்டது. அந்த குறையை விஜய் நீக்க வேண்டும். என குறிப்பிட்டுள்ளார்.