அரசியல் நகர்விற்காக மனைவியை விட்டு பிரிந்தாரா விஜய்?
விஜய் அரசியலுக்கு வருவது மனைவி சங்கீதா மற்றும் மகன் சஞ்சைக்கும் பிடிக்காததால் இருவரையும் விட்டு பிரிந்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சினிமாவில் மட்டுமல்ல பொதுச் சேவைகள் செய்வதிலும் தற்போது கவனம் செலுத்தி வருகின்றார்.
பொதுவாக தனது படங்களின் இசை வெளியீட்டு விழா மற்றும் தான் செல்லும் கல்யாண சுப நிகழ்வுகளுக்கு தனது மனைவி சங்கீதாவுடன் தான் செல்வார்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே தனது மனைவி இல்லாமல் தனியாக தான் வருகிறார்.
கடைசியாக மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பின் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் வேறு எந்த ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில், இவர்களுக்கிடையிலான பிரிவுக்கு விஜய்யின் அரசியல் நகர்வு தான் காரணம் என தமிழகத்தின் மூத்த செய்தியாளர் ஒருவர் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.