இலங்கையில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டிய அனுரகுமார; தமிழகத்தில் விஜய்....மாற்றம் வருமா!
இலங்கையில் நீண்டகாலமாக அதிகாரத்தில் இருந்த பாரம்பரிய அரசியல் குடும்பங்களை வீழ்த்தி, ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்த அநுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதியாக மக்கள் தெரிவு செய்து ராஜபக்க்ஷக்களை வீட்டிற்கு அனுப்பியமை யாரும் எதிர்பராத ஒன்று.
மக்களின் மனதை வென்று ஜனாதிபதியாக இலங்கை வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் அனுர குமார. அதுமட்டுமல்லாது அனுர அடித்த அலையில் அள்ளுண்டு ராஜபக்ச குடும்பம் உட்பட பல சிங்கள தலைமைகள் காணாமல் போயுள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல்
இலங்கையில் , எப்படி ஜனாதிபதி அனுர குமார மக்கள் மங்களை வென்று சாதித்தாரோ, அதேபோன்றதொரு சூழலைத் தமிழகத்தில் விஜய் உருவாக்கி வருகிறார் என சமூக வலைத்தளத்தில் பதிவுகள் வெளியாகியுள்ளது.
2026 ஏப்ரல் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டுள்ள விஜய், தமிழகத்தின் பிரதான நீண்டகால ஆட்சியாளர்களான திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்துகிறார்.
அநுரவின் வெற்றிக்குக் களம் அமைத்துக் கொடுத்தது இளைஞர்களின் ஆதரவு. அதே பாணியில், விஜய்யும் தனது இளைஞர்களை மையமாக வைத்தே தனது தேர்தல் அறிக்கையை வடிவமைத்துள்ளார்.
ஊழலற்ற நிர்வாகம் மற்றும் அடிப்படை மாற்றத்தை விரும்பும் மக்கள், இலங்கையில் அநுரவை அங்கீகரித்தது போல், தமிழகத்தில் விஜய்க்கும் ஒரு வாய்ப்பு வழங்கக்கூடும் என பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.