இலங்கை வந்த கனடா குடும்பத்திற்கு விடுதியில் காத்திருந்த அதிர்ச்சி!
கனடாவிலிருந்து இலங்கைக்குச் சுற்றுலா சென்ற குடும்பம் ஒன்றின் உடமைகள் மற்றும் பெருந்தொகை பணம் திருடப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தென்னிலங்கையில் உள்ள ஒரு சுற்றுலா விடுதி ஒன்றில் கனடா குடும்பத்தின் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2 Tablets , 1000 கனடிய டாலர்கள் ,பல லட்சம் ரூபாய்
ஒரு தம்பதியினர், அவர்களது மகன் மற்றும் கனடிய மருமகள் ஆகியோரின் உடமைகள் பணமே திருபோயுள்லதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 டேப்லெட்கள் (Tablets) , 1000 கனடிய டாலர்கள் மற்றும் பல லட்சம் இலங்கை ரூபாய் என்பன திருபோயுள்ளதாக கூறப்படுகின்றது. பாதுகாப்புக் கருதி மகன் மற்றும் மருமகள் தமது கணினிகள் மற்றும் பணப்பைகளை பெற்றோரின் அறையில் வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளனர்.
அவர்கள் திரும்பியபோது, அறையின் ஜன்னல்கள் திறக்கப்பட்டிருப்பதையும், உடமைகள் திருடப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். விடுதியின் பின்புறம் 4-வது மாடி வரை கட்டப்பட்டிருந்த இரும்புக்கம்பிகளின் உதவியுடன் திருடர்கள் உள்ளே நுழைந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக காலி (Galle) காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே வெளிநாடுகளிலிருந்து தாயகம் செல்பவர்கள் விடுதிகளில் தங்கும்போதும், பயணங்களின் போதும் அதிக விழிப்புணர்வுடன் இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்