சிறுவர்கள் இருவரைத் தாக்கி காணொளி ; பொலிசார் அதிரடி
ஆண் குழந்தை ஒன்றையும் பெண் குழந்தை ஒன்றையும் கொடூரமாகத் தாக்கி, அதனைத் தனது கைத்தொலைபேசியில் காணொளியாகப் பதிவு செய்த நபர் ஒருவர் பின்னவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், நேற்று (19) சந்தேகநபர் பின்னவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரால் கைது
கைது செய்யப்பட்டவர் பலாங்கொடை - பின்னவலை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 26 வயதுடைய நபராவார்.
தாக்குதலுக்கு இலக்கான 04 வயதுடைய பெண் குழந்தையும் 07 வயதுடைய ஆண் குழந்தையும் வைத்திய பரிசோதனைகளுக்காகவும் சிகிச்சைக்காகவும் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கான பின்னணி மற்றும் காரணத்தைக் கண்டறிவதற்கும், சந்தேகநபருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பின்னவலை பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.