சட்டவிரோத பணப்பரிமாற்றம்; வங்கி அதிகாரிகள் குறித்து நீதிமன்றின் உத்தரவு!
சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு தனியார் வங்கி அதிகாரிகளும் செப்டம்பர் 3ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொறியியல் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளின் வாதங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான், சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

நான்கு வங்கி அதிகாரிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை மனுக்களையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருட்கள் இறக்குமதி செய்வதாகக் கூறி ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை சட்டவிரோதமாக நாட்டிலிருந்து வெளியேற்றியதுடன், குறித்த பணப் பரிமாற்றங்களுக்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கியதாகவும் சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.