இலங்கையில் இந்திய துணை ஜனாதிபதி செய்த செயல்; தமிழர் பண்பாடு வெளிப்பட்ட தருணம்!
இலங்கை வந்திருந்த இந்திய துணை ஜனாதிபதி ராதாகிருஸ்ணன் , தனது பாதணிகளை கழற்றி வீட்டுக்குள் நுழைந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பாராட்டை பெற்று வருகின்றது.
இந்திய துணை ஜனாதிபதியின் இந்த செயல் தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தியிருந்தது.

தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்திய தருணம்
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்,நேற்றைய தினம் (20) காலை நுவரெலியாவிற்கு விஜயம் செய்து, இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்களுக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் முன்னேற்றங்களையும் பார்வையிட்டார்.
இதன்போதே வீடொன்றுக்குள் நுழைவதற்கு முன்பு தனது பாதணிய கழற்றிவிட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த கும்பத்திற்கு இந்திய துணை ஜனாதிபதி மரியாதை செலுத்தி இருந்தார்.

அதேவேளை நமது நாட்டில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் குத்துவிளக்கை ஏற்றும்போது கூட்ட சப்பாத்தை கழற்றாது தீபத்தை ஏற்றுகின்றனர்.
இந்நிலையில் தமிழர் பாரம்பரியத்தை மதித்து இந்திய துணை ஜனாதிபதி ராதாகிருஸ்ணன் செய்த செயல் பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
