பெரும் வெற்றியளித்த இலங்கை சிப்ஸ் தொழிற்சாலை
இலங்கையின் முதலாவது உருளைக்கிழங்கு சீவல் (Potato Chips) தயாரிப்பு தொழிற்சாலை முன்னோடியானது பெரும் வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கமத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இத் திட்டமானது ரூ.100 மில்லியன் செலவில் செயற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உருளைக்கிழங்கை பெறுமதி மிக்க பொருளாக சந்தைக்குக் கொண்டு வருவதே இதன் நோக்கம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள சில உணவு பதப்படுத்தும் நிறுவனங்களால் உருளைக்கிழங்கு சீவல்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் அதற்கான மொத்த செலவு ரூ.21 பில்லியன்களாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சில தனியார் நிறுவனங்களால் அவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
2021 ஆம் ஆண்டுத் தரவுகளின் படி இந்நாட்டில் தயாரிக்கப்பட்ட உருளைக்கிழங்கு சீவல்கள் 6, 321 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகியுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.