உணவக உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் ; பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
கொழும்பு கல்கிஸ்ஸை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட சொய்சாபுர பகுதியில் கடந்த 20 ஆம் திகதி உணவக உரிமையாளர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகத்தால் உயிரிழந்தமை தொடர்பில் கல்கிஸ்ஸை பிரிவுக்குட்பட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதன்படி, சிசிடிவி (CCTV) காணொளிக் காட்சிகளின் அடிப்படையில் இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்கு காவல்துறை பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளது.

சந்தேகநபரின் நிழற்படம் மற்றும் காணொளி ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, அவர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளுமாறு காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரி / கல்கிஸ்ஸை: 071 - 8591661 காவல்துறைப் பொறுப்பதிகாரி / கல்கிஸ்ஸை பிரிவுக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் :071 - 8596408