கதிர்காம பாதயாத்திரை நாய் குறித்து சமூக ஊடக சர்ச்சை ; மத நல்லிணக்கத்தை வலியுறுத்திய ராகுல தேரர்
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட கருத்தொன்றைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைக்கு மத்தியில், பௌத்த துறவியான ராகுல தேரர் மத நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர மரியாதையை வலியுறுத்தி கருத்து வெளியிட்டுள்ளார்.
கதிர்காம பாதயாத்திரையுடன் தொடர்புடைய சம்பவமொன்றைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் மதம் தொடர்பாக வெளியிடப்பட்ட கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இதையடுத்து, பல்வேறு தரப்பினரிடையே எதிர்வினைகள் வெளியாகின.
[V5NDWN ]
இந்த நிலையில், முகநூலில் பதிவொன்றை வெளியிட்ட ராகுல தேரர், நபிகள் நாயகம் முகம்மது (ஸல்) அவர்களின் மன்னிப்பு மற்றும் கருணை பண்புகளை நினைவுகூர்ந்தார்.
"முகம்மது நபி அவர்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால், அந்த இளைஞருக்கு தண்டனை வழங்கியிருக்க மாட்டார். மாறாக, மன்னித்து, அரவணைத்து, அவருடன் கலந்துரையாடியிருப்பார்.
அத்தகைய மகத்தான மனிதர் அவர்" என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் பொறுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்தக் கருத்து சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.