சந்நிதியான் ஆலய சூழலில் சுகாதார பரிசோதகர்கள் அதிரடி; அகற்றப்பட்ட வியாபாரி!
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் தொண்டமானாறு சந்நிதியான் ஆலய சூழலில் மருத்துவ சான்றிதழ் இன்றி வெளிமாவட்ட தும்பு மிட்டாய் வியாபாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த பெருவிழா இடம்பெற்று வரும் சூழலில் மருத்துவ சான்றிதழ் இன்றி வெளிமாவட்ட வியாபாரி ஒருவர் தும்பு மிட்டாய் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் விற்பனைக்கு வைத்திருந்த தும்பு மிட்டாய் வல்வெட்டித்துறை பொதுச்சுகாதார பரிசோதகரினால் பறிமுதல் செய்யப்பட்டு அது தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

சட்ட நடவடிக்கை
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் இடம்பெற்று வரும் நிலையில் சுகாதார நடைமுறைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 16/08/2026 அன்று ஆலய சூழலில் தடைசெய்யப்பட்ட பகுதியில் அறிவுறுத்தலை மீறி வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் தும்பு மிட்டாய் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனை அவதானித்த வல்வெட்டித்துறை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஸ் அவர்களை விசாரித்தபோது மருத்துவ சான்றிதழ் இன்றி தும்பு மிட்டாய் விற்பனையில் ஈடுபட்டு வந்தமை கண்டறியப்பட்டது.

அத்துடன், அறிவுறுத்தல்களை மதிக்காது வியாபார நடவடிக்கைக்கு தடை செய்யப்பட்ட பகுதியில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வியாபார நடவடிக்கையினை தொடர்ந்த காரணத்தினால் தும்பு மிட்டாய் உள்ளிட்ட விற்பனை தொகுதி பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பில் பொதுச்சுகாதார பரிசோதகரினால் எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.