கொழும்பில் கடும் மழையால் ஸ்தம்பித்த வாகன போக்குவரத்து
கொழும்பில் கடும் மழைகாரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினாலும் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாலும் கொழும்பின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.
திடீரென ஏற்பட்ட அதிகரித்த மழை நிலைமையினால் பாதைகளில் வெள்ளம் நிரம்பியிருந்ததுடன் , வீதிகள் என்பன தெளிவற்று இருள் சூழ்ந்து காணப்பட்டது. பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் என்பன மிக அதிகமாக காணப்பட்டிருந்து.
பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம்
சீரற்ற காலநிலையில் சாரதிகள் வாகனங்களை அவதானமாக செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
டுப்ளிகேசன் வீதியில் பாரியமரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதனால் குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்றது.
அத்துடன் ஆர்மர் வீதி, கொட்டாஞ்சேனை, யூனியன் பிளேஸ், புறக்கோட்டை பகுதி, மருதானை ஆகிய பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்றதாக தெரிவிகபப்டுகின்றது.