அவிசாவளை - இரத்தினபுரி வீதியில் விபத்து ; பேருந்தில் மோதி பிக்குனி ஒருவர் உயிரிழப்பு
அவிசாவளை - இரத்தினபுரி வீதியில் மின்னான சந்திக்கு அருகில் பஸ்ஸில் மோதி பிக்குனி ஒருவர் உயிரிழந்துள்ளதாக எஹெலியகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
அவிசாவளையிலிருந்து எஹெலியகொடை நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று மின்னான சந்திக்கு அருகில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் பயணித்தை தொடங்கிய போது வீதியில் பயணித்த பிக்குனி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த 77 வயதுடைய பிக்குனி எஹெலியகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பஸ் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எஹெலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.