பணமில்லா கட்டண வசதி ; தென் மாகாணப் பேருந்து சேவைகளில் நவீன மாற்றம்
தென் மாகாணத்தில் வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களைச் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் பணமில்லாத, கட்டண வசதி மேம்படுவதுடன், பயணிகள் எளிதாகவும், விரைவாகவும் பேருந்து கட்டணங்களைச் செலுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் போக்குவரத்து அமைச்சு ஆரம்பித்துள்ள இந்த முன்னோடி திட்டம், முன்னதாக மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்தநிலையில், தற்போது தென் மாகாணத்திலும் வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களைச் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.