வீட்டில் சிகிச்சைப் பெற்றுவரும் கொரோனா நோயாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
கொரோனா நோயாளர் ஒருவர் வீட்டில் சிகிச்சைபெறும் போது வீட்டில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் ஹர்ஷ சதீஸ்சந்திர விளக்குகிறார்.
இதன்படி பாதிக்கப்பட்டவர்கள் பின்வரும் விடயங்களில் அக்கறை கொள்ள வேண்டும் என்கிறார்.
*நல்ல ஓய்வில் இருக்க வேண்டும்.
* நல்ல காற்றோட்டமான அறையில் இருத்தல் அவசியம்.
*சத்துள்ள ஆகாரங்களை உட்கொள்ள வேண்டும்.
* உங்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் 1390 ஐ அழைத்து மருத்துவ ஆலோசனை பெறவும்.
* நிறையத் தண்ணீர் மற்றும் திரவங்களைக் குடிக்கவும்.
* மற்ற நோய்களுக்கான மருந்துகளை (நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவை) தொடர வேண்டும்.
*காய்ச்சல் இருக்குமானால் 2 பரசிட்டமோல் மாத்திரைகளை எடுக்க வேண்டும்.
*வேறு எந்த மாத்திரைகளையும் கொரோனாவுக்காக எடுக்கக் கூடாது. * ஒட்சிசன் தேவையேற்படின் 30 முதல் 40 படிகள் வரை வீட்டில் நடக்கலாம்.
*தொற்றுக்குள்ளானவர் இரவில் நன்கு உறங்க வேண்டும். அது பாதிக்கப்பட்டவரில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.