வாகன இறக்குமதிக்கு தடை? மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்
இலங்கையில் கடந்த ஆண்டு வாகன இறக்குமதி எதிர்பார்த்த இலக்கை விடவும், அதிகரித்ததன் காரணமாக நாட்டின் வெளிநாட்டு பொருளாதாரத் துறையில், அழுத்தம் ஏற்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதி மீதான தடைகள் மீண்டும் விதிக்கப்படும் என உண்மைக்குப் புறம்பான தகவல்கள் ஊடகங்களில் பரவியமையும் இதற்குக் காரணமெனக் கூறப்படுகிறது.

பணவீக்கம்
மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
டிட்வா சூறாவளி தாக்கத்திற்கு முன்னதாக மேற்கொண்ட கணிப்புகளின்படி, 2026ஆம் ஆண்டில் பணவீக்கம் படிப்படியாக உயர்வடைந்து, ஆண்டின் இரண்டாம் பாதியில் இலக்கை எட்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இயற்கை பேரழிவுகள் காரணமாக பணவீக்கத்தில் உயர்வு மற்றும் இறக்கம் ஆகிய இருவகை அபாயங்களும் உள்ளன எனவும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.