நாட்டில் உச்சத்தை எட்டப்போகும் மரக்கறிகளின் விலை
நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, எதிர்வரும் நாட்களில் மரக்கறிகளின் விலை உயர்வடையக்கூடும் என கொழும்பு மெனிங் சந்தை வர்த்தகர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காலநிலை மாற்றம்
கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையால் பயிர்ச்செய்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே எதிர்வரும் வாரங்களில் மரக்கறிகளின் விலை உயரும் என்பது வெளிப்படையானது என அவர் தெரிவித்துள்ளார்.
வானிலை மாற்றங்களுக்கு முன்பு விலை குறைவாக இருந்தன. அது விவசாயிகளைப் பாதித்தது. இருப்பினும், வரும் நாட்களில் விலை நிச்சயமாக உயரும்.
அத்துடன் இலங்கையில் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, வானிலை இப்போது மரக்கறிகளின் விலையை பாதிக்கும் ஒரு முக்கிய காரணியாக மாறியுள்ளது என அவர் மேலும் கூறினார்.